/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அ . தி . மு . க ., செயல்வீரர்கள் கூட்டம்
/
அ . தி . மு . க ., செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : அக் 23, 2024 06:21 AM

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடந்தது.
ஒன்றிய செயலாளர் ராசேந்திரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் நாராயணன் வரவேற்றார்.
முன்னாள் அமைச்சர்கள் மோகன், முக்கூர் சுப்ரமணியன் ஆகியோர், அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். தற்போது தி.மு.க., ஆட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கி கூற வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., அரசு அமைய நிர்வாகிகள் தீவிரமாக பாடுபட வேண்டும் உட்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கி, பேசினர்.
கூட்டத்தில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர் ராஜசேகர், பாசரை மாவட்ட செயலாளர் வினோத் உள்ளிட்ட பல அணி நீர்வாகிகள் பங்கேற்றனர். நகர அவைத் தலைவர் ஜியாவுதீன் நன்றி கூறினார்.