/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குடிநீருக்காக வெட்டப்பட்ட கிணறு ஓராண்டில் சரிந்து விழுந்தது: மக்கள் அதிர்ச்சி
/
குடிநீருக்காக வெட்டப்பட்ட கிணறு ஓராண்டில் சரிந்து விழுந்தது: மக்கள் அதிர்ச்சி
குடிநீருக்காக வெட்டப்பட்ட கிணறு ஓராண்டில் சரிந்து விழுந்தது: மக்கள் அதிர்ச்சி
குடிநீருக்காக வெட்டப்பட்ட கிணறு ஓராண்டில் சரிந்து விழுந்தது: மக்கள் அதிர்ச்சி
ADDED : அக் 27, 2025 11:29 PM

திருக்கோவிலுார் ஒன்றியம், கூவனுார் ஊராட்சி, மிலாரிப்பட்டு கிராமத்தில் 2023 -2024ம் நிதி ஆண்டில் 14 லட்சம் ரூபாய் மதிப்பில் திறந்த வெளி கிணறு, ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் வெட்டப்பட்டது. அருகிலுள்ள தென்பெண்ணை ஆற்றில் இருந்து கிராமத்திற்கு ஏற்கனவே தண்ணீர் சென்ற நிலையில், தேவையின்றி அரசு பணத்தை வீணடிக்கும் வகையில் கிணறு வெட்டப்படுவதாக கிராம மக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
எதிர்ப்பை மீறி கிணறு வெட்டும் பணி தொடர்ந்தது. தரமற்ற வகையில் கட்டப்படுவதாக ஒன்றிய நிர்வாகத்திற்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் பணிகள் நடந்து முடிந்தது. இந்நிலையில் கடந்த 24ம் தேதி சிறிய அளவில் பெய்த மழைக்கே கிணற்றின் பாதி பகுதி இடிந்து விழுந்தது. கிணறு பயன்பாட்டிற்கு வராத நிலையில் பொருத்தப்பட்ட மோட்டாரையும் ஊராட்சி நிர்வாகம் ஏற்கனவே அகற்றி இருந்தது. இந்நிலையில் கிணற்றின் மீத பாதியும் சரிந்து விழுந்தது.
பொதுமக்களுக்கு பயனளிக்காத திட்டத்திற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பில் தரமற்ற வகையில் வெட்டி கட்டப்பட்ட கிணறு இடிந்து விழுந்தது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் எனக் கோரி கிராம மக்கள் நேற்று திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., வை சந்தித்து மனு அளித்துள்ளனர். இதுபோன்று பல ஊராட்சிகளில் ஒரே குழுவினர் இதுபோன்று கிணறு வெட்டியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

