/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிணற்றில் குளித்த வாலிபர் பலி
/
கிணற்றில் குளித்த வாலிபர் பலி
ADDED : மார் 22, 2025 08:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம் : கிணற்றில் குளித்த வாலிபர், நீரில் மூழ்கி இறந்தார்.
சின்னசேலம் அடுத்த பாண்டியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் கர்ணன்,25; பட்டதாரியான இவர், வேலையின்றி வீட்டில் இருந்து வந்தார்.
இவர், நேற்று பகல் 12 மணிக்கு தங்கள் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் இறங்கி குளித்தபோது, நீரில் மூழ்கி இறந்தார். சின்னசேலம் போலீசார், கர்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.