/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இளவட்ட கல் விழுந்து வாலிபர் பரிதாப பலி
/
இளவட்ட கல் விழுந்து வாலிபர் பரிதாப பலி
ADDED : ஜன 18, 2024 03:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: இளவட்ட கல் துாக்கிய வாலிபர் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தநாடு பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் மகன் பிரபு, 27; தச்சு வேலை செய்து வந்தார்.
இவர் நேற்று மாலை கிராமத்தில் நடந்த பொங்கல் விளையாட்டு போட்டியில் பங்கேற்று, இளவட்ட கல்லை துாக்கியபோது, தவறி, அவரது முகத்தாடையில் கல் விழுந்தது.
உடன், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.
இதுகுறித்து திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.