/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வெள்ளிமலை அஞ்சலகத்தில் ஆதார் சேவை மையம்
/
வெள்ளிமலை அஞ்சலகத்தில் ஆதார் சேவை மையம்
ADDED : செப் 25, 2024 06:51 AM
கள்ளக்குறிச்சி : வெள்ளிமலை அஞ்சலகத்தில் ஆதார் சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விருத்தாசலம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அப்துல்லத்தீப் செய்திக்குறிப்பு:
கல்வராயன்மலை மையப் பகுதியில் வெள்ளிமலை துணை அஞ்சலம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் ஆதார் சேவை மையம் நடைபெற்று வருகிறது. இச்சேவை மையத்தில் புதியதாக ஆதார் அட்டை எடுத்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் இணைத்தல், புகைப்படம் மாறுதல் உள்ளிட்ட ஆதார் சார்ந்த அனைத்து சேவைகளும் மேற்கொள்ளப்படுகிறது.
கல்வராயன்மலை பகுதியில் மலைவாழ் மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.