/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா
/
உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா
ADDED : ஜூலை 28, 2025 10:04 PM

திருக்கோவிலூர்; திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் ஆடிப்பூர விழாவில் ஆண்டாளுக்கு நுார்தடா அக்காரவடிசில் நெய்வேத்தியம் நடந்தது.
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர பெருவிழாவில் நேற்று காலை 6:00 மணிக்கு, மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், காலை 7:30 மணி வரை நித்திய பூஜைகள், 8:00 மணிக்கு ஆண்டாள் நாச்சியார் சமேத தேகளீச பெருமாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. மதியம் 12:00 மணிக்கு கண்ணாடி அறையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், ஆண்டாளுக்கு நுார்தடா அக்காரவடிசில் நெய்வேத்தியம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஆண்டாள் நாச்சியார் சமேத தேகளீச பெருமாள் திருக்கல்யாண வைபவம் பெரியாழ்வார் முன்னிலையில் நடந்தது. இரவு 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடாகி ஆஸ்தானம் எழுந்தருளினார்.
ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் உத்தரவின் பேரில், தேவஸ்தான ஏஜென்ட் கோலாகலன் மேற்பார்வையில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

