/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அபாயம்: கள்ளக்குறிச்சி நான்கு வழிச்சாலையில் விபத்து...: சென்டர் மீடியன்களை உடைத்து அட்டூழியம்

ADDED : ஜூன் 27, 2025 12:28 AM

கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான பணிகள் கடந்தாண்டு பிப்ரவரியில் துவங்கியது.
மொத்தம் 65 கி.மீ., நீளமுள்ள இந்த வழித்தடத்தில், முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகளுக்கு 176 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த சாலையில், கோமுகி ஆறு உள்ளிட்ட பகுதியில் உயர்மட்ட பாலம் மற்றும் பல இடங்களில் சிறுபாலங்கள் அமைக்கப்பட்டு சாலைப்பணிகள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளன.
இந்த வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நான்கு வழிப்பாதை என்பதால், சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு, சாலைகள் பிரிக்கப்பட்டுள்ளன.
இதில், ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்துக்கு செல்வதற்காக, ஊர் அமைந்துள்ள பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில், சாலையின் நடுவே குறுக்கு சாலை அமைத்து வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதுபோன்று சென்டர் மீடியன் உடைக்கப்பட்டுள்ள பகுதிகளில் அதிகளவில் வாகனங்கள் சாலையின் குறுக்கே செல்வதால், விபத்துகள் தொடர் கதையாகி வருகின்றன. எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் தொடரும் இதுபோன்ற அத்துமீறல்களால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்ந்து வருகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ' இந்த பிரச்னை பல மாதங்களாக உள்ளது. ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த சாலையில் உடைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன்களை சீரமைத்து விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.