/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோட்டைகுளத்தை செப்பனிட்டு பராமரிக்க நடவடிக்கை தேவை
/
கோட்டைகுளத்தை செப்பனிட்டு பராமரிக்க நடவடிக்கை தேவை
கோட்டைகுளத்தை செப்பனிட்டு பராமரிக்க நடவடிக்கை தேவை
கோட்டைகுளத்தை செப்பனிட்டு பராமரிக்க நடவடிக்கை தேவை
ADDED : ஆக 15, 2025 10:55 PM

தியாகதுருகம், ;தியாதுருகத்தில் மலையடிவாரத்தில் உள்ள கோட்டைகுளத்தை செப்பனிட்டு பராமரிக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தியாதுருகம் நகரின் மைய பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மலை மீது திப்பு சுல்தான் காலத்திய இடிந்த நிலையில் கோட்டை மற்றும் 3 பிரம்மாண்ட பீரங்கிகள் உள்ளன. தொல்லியல் துறையின் மூலம் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக பராமரிக்கப்படுகிறது.
மலை அடிவாரத்தின் வடக்கு பகுதியில் குடிநீர் தேவைக்காக பல நுாற்றாண்டுகளுக்கு முன் வெட்டப்பட்ட கோட்டைகுளம் உள்ளது. மலை மீது பெய்யும் மழை நீர் இக்குளத்தில் சேகரமாகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அக்காலத்தில் போர்வீரர்கள் இதனை குடிநீராக பயன்படுத்தியுள்ளனர். தற்போது இக்குளத்தில் தேங்கும் தண்ணீர் குடிநீராக பயன்படுத்தப்படவில்லை என்றாலும் நகரின் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக குளம் பராமரிப்பின்றி முட்செடிகள் வளர்ந்து, பாசிகள் படர்ந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சிலர் குப்பை கொட்டும் இடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது.
இதனை தூர்வாரி முட்செடிகளை அகற்றி செப்பனிட்டு பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வரலாற்று சிறப்புமிக்க இக்குளத்தை சீரமைக்க தொல்லியல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.