திறந்த நிலையில் கழிவு நீர் கால்வாய் விபத்துக்கு முன் நடவடிக்கை தேவை
திறந்த நிலையில் கழிவு நீர் கால்வாய் விபத்துக்கு முன் நடவடிக்கை தேவை
ADDED : செப் 23, 2026 04:12 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காந்தி ரோட்டில் கழிவு நீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. .
கள்ளக்குறிச்சி காந்தி ரோடு, குளத்து மேட்டு தெரு சந்திக்கும் பகுதியான இங்கு, வாகன போக்குவரத்து நெரிசல், மக்கள் நடமாட்டம் மிகுதியாக உள்ளதுடன், பெண்கள் பள்ளிக்கு மிக அருகிலும், காய்கறி மார்க்கெட் செல்லும் வழியாகவும் இருப்பதால் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இந்த வழியை தான் பயன்படுத்துகின்றனர்.
தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாய், மழை நீரால் மூடப்படும் போது, வாகன ஓட்டிகள் பொதுமக்கள் விபத்துக்குள்ளாக வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக இந்த கால்வாய் மூடப்படாமலேயே உள்ளது.
பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மீது அக்கறையின்றி திறந்தவெளி கால்வாய் பகுதியில் அசம்பாவிதம் ஏற்படும் முன், திறந்தவெளி கழிவு நீர் கால்வாயை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
