/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ள நடவடிக்கை தேவை! அதிகாரிகளிடம் கலெக்டர் அறிவுறுத்தல்
/
வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ள நடவடிக்கை தேவை! அதிகாரிகளிடம் கலெக்டர் அறிவுறுத்தல்
வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ள நடவடிக்கை தேவை! அதிகாரிகளிடம் கலெக்டர் அறிவுறுத்தல்
வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ள நடவடிக்கை தேவை! அதிகாரிகளிடம் கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : மே 03, 2024 11:50 PM

கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனகலெக்டர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட அலுவலர்களுடான ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ள மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. வெயிலினால் ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்க சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்தும் இக்குழு மூலம் கண்காணிக்கப்படும்.
வெயிலின் தாக்கத்தினால் மருத்துவமனைகளில் தீ விபத்து போன்ற எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் மருத்துவமனைகளில் உள்ள மின் இணைப்புகளை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் முறையாக பராமரிக்க வேண்டும்.
மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை, தீப்பெட்டி தொழிற்சாலைகள், பாதுகாப்பு குடோன்கள், எளிதில் தீப்பிடிக்க கூடிய திரவங்கள், வாயுக்கள் தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட குழுவினர் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
ஆய்வின்போது தீ பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளமல் இருந்தாலோ, முறையாக அனுமதி பெறாமல் தொழிற்சாலைகள் நடப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், தீ விபத்து ஏற்பட்டால் தடுக்கவும், தீ விபத்து ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு சார்பில் சம்மந்தப்பட்ட தொழிற்சாலைகளுக்கு பயிற்சி வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அந்தந்த துறை அதிகாரிகளிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்களின் வசதிக்காக கடைகளின் வெளியே குடிநீர் வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாகவும் வணிகர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சத்தியாநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ரமேஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.