/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சுகாதார கழிவறை கட்டடம் திறக்க நடவடிக்கை தேவை
/
சுகாதார கழிவறை கட்டடம் திறக்க நடவடிக்கை தேவை
ADDED : ஜூலை 01, 2025 04:59 AM

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டில் நான்கு முனை சந்திப்பு அருகே புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சுகாதார கழிவறை கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூங்கில்துறைப்பட்டு, கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலைக்கு இடையே அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சுற்றி 40க்கு மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் மையப்பகுதியாக உள்ளது.
தினமும் பள்ளி மாணவர்கள் முதல் வெளியூர் வேலைக்கு செல்பவர் வரை நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வந்து செல்லக்கூடிய பகுதியாக உள்ளது.
இதனால், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மூங்கில்துறைப்பட்டில் நான்கு முனை சந்திப்பின் அருகே புதிதாக ஊராட்சி சார்பில் சுகாதார கழிவறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம் கட்டப்பட்டப்பட்டு பல மாதங்களாகியும் இதுவரை திறப்பு விழா நடைபெறவில்லை.
இதனால், அப்பகுதி பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இந்த கட்டடத்தில் தற்போது குப்பைகள் அள்ளும் கருவிகளை வைக்கும் குடோனாக மாறியுள்ளது.
பொதுமக்கள் நலன் கருதி ஊராட்சி சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சுகாதார கழிவறை கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.