/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை தேவை
/
ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை தேவை
ADDED : ஜன 19, 2026 06:25 AM

ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சியில் உடைந்து ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சாலையோர மின்கம்பம் கடந்த சில மாதங்களுக்கு முன் உடைந்தது. மின்கம்பத்தின் நடுப்பகுதி உடைந்து, சற்று சாய்ந்த நிலைக்கு சென்றது.
எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முற்றிலுமாக உடைந்து சாலையில் விழ வாய்ப்புள்ளது. இதையொட்டி, மின்கம்பத்தின் மேற்பகுதியில் கயிறு போட்டு, அருகில் உள்ள மரத்தில் கட்டியுள்ளனர். சாலையை ஒட்டியவாறு உள்ள கம்பத்தால் விபத்து அபாயம் நீடித்து வருகிறது. எனவே, உடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பம் அமைத்திட மின்வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

