/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விடுமுறை நாளில் மது விற்றவர்கள் மீது அதிரடி நடவடிக்கை: 69 பேர் மீது வழக்கு : 575 மதுபாட்டில்கள் பறிமுதல்
/
விடுமுறை நாளில் மது விற்றவர்கள் மீது அதிரடி நடவடிக்கை: 69 பேர் மீது வழக்கு : 575 மதுபாட்டில்கள் பறிமுதல்
விடுமுறை நாளில் மது விற்றவர்கள் மீது அதிரடி நடவடிக்கை: 69 பேர் மீது வழக்கு : 575 மதுபாட்டில்கள் பறிமுதல்
விடுமுறை நாளில் மது விற்றவர்கள் மீது அதிரடி நடவடிக்கை: 69 பேர் மீது வழக்கு : 575 மதுபாட்டில்கள் பறிமுதல்
ADDED : ஜன 18, 2024 04:53 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், கள்ளத்தனமாக மதுபாட்டில் மற்றும் சாராயம் விற்றது தொடர்பாக 16 பெண்கள் உட்பட 69 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
திருவள்ளுவர் தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை நேற்று முன்தினம் (16ம் தேதி) மூடவேண்டும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார். இதையொட்டி, கள்ளத்தனமாக மதுபாட்டில் மற்றும் சாராயம் விற்பவர்களை கண்டறிந்து கைது செய்யுமாறு எஸ்.பி., சமய்சிங்மீனா அறிவுறுத்தினார். அதன்பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அதன்படி, சாராயம் மற்றும் மதுபாட்டில் விற்றது தொடர்பாக, சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் 9 பேர், சின்னசேலம் மற்றும் திருநாவலுார் போலீஸ்ஸ்டேஷன்களில் தலா 7 பேர், சின்னசேலம், ரிஷிவந்தியம் மற்றும் உளுந்துார்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஸ்டேஷனில் தலா 3 பேர் என மாவட்டம் முழுவதும் 16 பெண்கள் உட்பட 69 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, அனைவரையும் கைது செய்தனர். அதில் 30 பேர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டனர். கைதானவர்களிடமிருந்து 148 லிட்., சாராயம் மற்றும் 575 மதுபாட்டில்கள், 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர பொது இடத்தில் மது அருந்தியது தொடர்பாக 63 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
அதேபோல், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் அதிகளவு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க போலீசார் மேற்கொண்ட சோதனையில், மதுஅருந்தி விட்டு வாகனம் ஓட்டியது தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் 2 பேர், வரஞ்சரம் மற்றும் தியாகதுருகம் போலீஸ் ஸ்டேஷனில் தலா ஒருவர், கள்ளக்குறிச்சி போக்குவரத்து ஸ்டேஷனில் 5 பேர் என மாவட்டம் முழுவதும் மொத்தமாக 29 பேர் மீது வழக்கு போலீசார் வழக்கு பதிந்தனர். மேலும், பதிவெண் இல்லாத வாகனம், உரிய ஆவணங்கள் இல்லாதது மற்றும் ெஹல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியது தொடர்பாக 450 வாகனங்கள் மீதும் வழக்கு பதியப்பட்டது.