/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குழந்தைகள் ஊட்டச்சத்து பணியில் கூடுதல் கவனம் தேவை ; கலெக்டர் அறிவுறுத்தல்

ADDED : ஜூலை 19, 2025 01:15 AM

கள்ளக்குறிச்சி : குழந்தைகளின் ஊட்டச்சத்து தொடர்பான பணிகளில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், தேசிய குழந்தைகள் நலத் திட்டம் குறித்து திறனாய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் குழந்தைகளிடம் கண்டறியப்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள் மற்றும் வளர்ச்சியில் தாமதம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் வகையில் சுகாதாரத்துறை மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஒருங்கிணைந்து குழுவாக தொடர்ந்து பணியாற்ற வேண்டும். ஊட்டச்சத்து பணிகளில் கூடுதல் கவனத்துடன் பணியாற்ற வேண்டும்.
தேவைப்படும் நபர்களுக்கு அரசு மருத்துவமனை மற்றும் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டுச் சேவைகள் மையத்திற்கு பரிந்துரைத்து சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். மருத்துவர்கள் மூலம் உரிய ஊட்டச்சத்து நல ஆலோசனைகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா மற்றும் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.