/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆதிதிராவிடர் விடுதி கட்டுமான பணிகள்: கலெக்டர் ஆய்வு
/
ஆதிதிராவிடர் விடுதி கட்டுமான பணிகள்: கலெக்டர் ஆய்வு
ஆதிதிராவிடர் விடுதி கட்டுமான பணிகள்: கலெக்டர் ஆய்வு
ஆதிதிராவிடர் விடுதி கட்டுமான பணிகள்: கலெக்டர் ஆய்வு
ADDED : பிப் 16, 2025 06:31 AM
கள்ளக்குறிச்சி: சடையம்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிடர் நல விடுதி கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 5.87 கோடி ரூபாய் மதிப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவிகளுக்கான விடுதி கட்டப்பட்டு வருகிறது.
3 தளம் கொண்ட புதிய கட்டடத்தில் காப்பாளர், அலுவலகம், நுாலகம், உணவகம், பொருட்கள் வைப்பு, சமையல் ஆகியவற்றிற்கு தனி அறைகளும், மாணவிகள் தங்க 18 அறைகளும் உள்ளன. விடுதி கட்டுமான பணிகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அவர், 'நிறைந்தது மனம்' என்ற நிகழ்ச்சியில் மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, 'வெளியூரில் இருந்து கல்லுாரிக்கு வருவது சிரமமாக உள்ளது. வீண் அலைச்சல் ஏற்படுகிறது. விடுதி கட்டடம் பயன்பாட்டிற்கு வந்தால் சிரமமின்றி கல்வி பயில உதவியாக இருக்கும் என' கலெக்டரிடம் மாணவிகள் கூறினர்.

