/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
/
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
ADDED : அக் 12, 2024 11:19 PM
சங்கராபுரம்: சங்கராபுரம் ஒன்றிய தொடக்கக் கல்வி துறை சார்பில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது.
வடசெட்டியந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை லட்சுமி வரவேற்றார். பள்ளியில் புதிதாக 4 மாணவர்கள் சேர்ந்தனர்.
இதே போல் பிரம்மகுண்டம், புத்திராம்பட்டு, தேவபாண்டலம், மூரார்பாளையம், சங்கராபுரம் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்தது. தொடக்கப் பள்ளிகளில் 10 மாணவர்கள், பொரசம்பட்டு, லக்கினாய்கன்பட்டி, வடபொன்பரப்பி, எஸ்.குளத்துார், பூட்டை பகுதிகளில் உள்ள நடுநிலை பள்ளிகளில் 10 சேர்ந்தனர்.