/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விளையாட்டு விடுதிகளில் சேர்க்கை: கலெக்டர் அழைப்பு
/
விளையாட்டு விடுதிகளில் சேர்க்கை: கலெக்டர் அழைப்பு
ADDED : ஏப் 23, 2025 11:10 PM
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர்கள், விளையாட்டு விடுதிகளில் சேர்க்கை பெற கலெக்டர் பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், 28 இடங்களில் பயிற்சி, தங்கும் வசதி, சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த விடுதிகளில் சேர்க்கை பெற விண்ணப்பப்படிவம், www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சேர விருப்பமுள்ள 7, 8, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவ, மாணவியர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். வரும் மே, மாதம் 5ம் தேதி கடைசி நாள்.
மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மையத்தில், 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை பெற்று கொள்ளலாம்.
இந்த விடுதியில் சேர விரும்பும் மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வரும் மே 7 தேதியும், மாணவியருக்கான போட்டிகள், வரும், 8,ம் தேதியும், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.
மாநில அளவிலான தேர்வு போட்டிகள் மாணவர்களுக்கு, தஞ்சாவூர், சென்னை, கடலுார், விழுப்புரம் மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் வரும் மே, 12ம் தேதியும், மாணவியருக்கு கைப்பந்து போட்டி, மே,13,ம் தேதியும் நடக்கிறது.
தனி நபர், குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாவட்ட, மாநில அளவில் குடியரசு, பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.