ADDED : மார் 18, 2024 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார், : திருக்கோவிலுார் தொகுதி அ.தி.மு.க., சார்பில் லோக்சபா தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விழுப்புரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட, திருக்கோவிலுார் சட்டசபை தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருக்கோவிலுாரில் நடந்தது. மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர் ராதாகிருஷ்ணன், தேர்தல் வியூகங்கள் குறித்து விளக்கினார். நகர செயலாளர் சுப்பு, ஒன்றிய செயலாளர் பழனி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வரும் லோக்சபா தேர்தல் பணியில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

