/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
/
அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : அக் 20, 2024 04:39 AM

தியாகதுருகம்: தியாகதுருகம் மேற்கு ஒன்றிய, நகர அ.தி.மு.க., செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஷியாம்சுந்தர் வரவேற்றார். மேற்கு ஒன்றிய செயலாளர் அய்யப்பா துவக்க உரையாற்றினார்.
முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பிரபு, அழகுவேல் பாபு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா முன்னிலை வகித்தனர். சட்டசபை எதிர்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், மாவட்ட அவைத் தலைவர் பச்சையாபிள்ளை, மருத்துவர் அணி இணைச் செயலாளர் பொன்னரசு, எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தங்கபாண்டியன், மாணவரணி செயலாளர் பாக்யராஜ், ஒன்றிய செயலாளர்கள், அருணகிரி, பழனி சுப்ரமணியன், நகர அவைத் தலைவர் அய்யம்பெருமாள், துணைச் செயலாளர் கிருஷ்ணராஜ், ஜெயச்சந்திரன், பாலகிருஷ்ணன், மணிவண்ணன், கதிர்வேல், மணி, பரியாஸ், சதாசிவம், பாண்டு, மணி, குமார், ஜெயபிரகாஷ், கிருஷ்ணமூர்த்தி, காமராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.