ADDED : அக் 09, 2024 04:18 AM

அ நிறம் | அளவு
தியாகதுருகம், : தியாகதுருகம் அ.தி.மு.க.,வினர் தமிழக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
தியாகதுருகம் ஒன்றிய, நகர அ.தி.மு.க., சார்பில் நடந்த போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஜான்பாஷா, நகர துணை செயலாளர் கிருஷ்ணராஜ் முன்னிலை வகித்தனர்.
தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், அய்யம்பெருமாள், ராஜவேலு, மணிவண்ணன், பாலகிருஷ்ணன், குமரவேல், பரியாஸ், பாண்டு, வேலுமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
