/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்
/
அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்
ADDED : மார் 13, 2024 02:05 AM

கள்ளக்குறிச்சி L போதைப் பொருட்களை கட்டுபடுத்தத் தவறிய தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த போராட்டத்திற்கு, செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், ஜெ., பேரவைச் செயலாளர் ஞானவேல், அவைத் தலைவர் பச்சையாப்பிள்ளை, பாசறை செயலாளர் வினோத் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாபு வரவேற்றார்.
முன்னாள் அமைச்சர் மோகன் போதை பொருட்களை கட்டுபடுத்த தவறிய தி.மு.க., அரசை கண்டித்து பேசினார். அனைத்து அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சின்னசேலம்
சின்னசேலம் பஸ் நிலையம் முன் நடந்த போராட்டத்திற்கு, முன்னாள் எம்.எல்.ஏ., அழகுவேலுபாபு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அய்யம்பெருமாள், நகர செயலாளர் ராகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
உளுந்துார்பேட்டை
உளுந்துார்ர்பேட்டையில் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.
முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் ராமசாமி, ஒன்றிய அவைத் தலைவர் பாண்டியன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள், உளுந்துார்பேட்டை, திருநாவலுார் ஒன்றியங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி சாலை மார்க்கமாக அ.தி.மு.க.,வினர் கைகோர்த்து நின்று தி.மு.க., அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் மணலுார்பேட்டையில் ஒன்றிய செயலாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கதிர் தண்டபாணி, அருணகிரி முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ரமேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சின்னராஜ், வைத்தியநாதன், பொதுக்குழு உறுப்பினர் சேகர், சத்தியமூர்த்தி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
திருக்கோவிலுார்
திருக்கோவிலுார்ஒன்றிய நகர அ.தி.மு.க., சார்பில், வடக்கு வீதியில் நடந்த போராட்டத்திற்கு, நகர செயலாளர் சுப்பு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பழனி, சேகர், சந்தோஷ் முன்னிலை வகித்தனர். ஐந்து முனை சந்திப்பிலிருந்து, வடக்கு வீதி வழியாக கட்ட கோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அணிவகுத்து நின்று தி.மு.க., அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
சங்கராபுரம்
சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் முன்னாள் எம்.பி., காமராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, இளந்தேவன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நாராயணன் வரவேற்றார்.
கோவிந்தசாமி, ஜியாவுதீன், ராஜா, குசேலன், அண்ணாமலை, வழக்கறிஞர் தாமரைச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தியாகதுருகம்
தியாகதுருகம் பஸ் நிலையம் எதிரே முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் ஷியாம் சுந்தர், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் ஜான் பாஷா உட்பட பலர் பங்கேற்றனர்.

