/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அ.தி.மு.க.,வினர் திண்ணை பிரசாரம்
/
அ.தி.மு.க.,வினர் திண்ணை பிரசாரம்
ADDED : நவ 25, 2025 04:57 AM

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் குறித்து துண்டு பிரசுரம் வழங்கி திண்ணை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
பிரசாரத்திற்கு மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் அருணகிரி, தண்டபாணி, துரைராஜ், சந்தோஷ் முன்னிலை வகித்தனர். ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் மணிகண்டன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர் மாவட்ட செயலாளர் குமரகுரு, அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் நன்மைக்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், மற்றும் சாதனை பணிகள் குறித்து பேசினார்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி, திண்ணை பிரசாரம் மேற்கொண்டார்.
மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சதீஷ்பாண்டியன், ஜெ., பேரவை மாவட்ட பொருளாளர் அருள்மணி, ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர்கள் வைத்தியநாதன், ராமதாஸ், ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் சின்னராஜ், நிர்வாகிகள் காந்தி, அய்யப்பன், சலீம், ஏழுமலை, சிவகுரு, சம்பத், வெங்கடேசன், சேட்டு மற்றும் பலர் பங்கேற்றனர்.

