/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 05, 2024 07:35 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க., சார்பில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கத் தவறிய தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி., காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேலு பாபு, பிரபு முன்னிலை வகித்தனர்.
இளைஞர், இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் வினோத் வரவேற்றார். நகர செயலாளர் பாபு, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் சீனுவாசன், மகளிரணி மாவட்ட செயலாளர் அமுதா தொடக்க உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து போனதை கண்டித்தும், போதைப் பொருள் விற்பனையை தடுக்க தவறிய தி.மு.க., அரசை கண்டித்தும் பேசினர். மருத்துவ அணி இணைச் செயலாளர் பொன்னரசு, ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

