/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டத்தில் சிறப்பிடம் பிடித்து சாதனை : பாரதி பள்ளி மாணவிக்கு சி.இ.ஓ., பாராட்டு
/
மாவட்டத்தில் சிறப்பிடம் பிடித்து சாதனை : பாரதி பள்ளி மாணவிக்கு சி.இ.ஓ., பாராட்டு
மாவட்டத்தில் சிறப்பிடம் பிடித்து சாதனை : பாரதி பள்ளி மாணவிக்கு சி.இ.ஓ., பாராட்டு
மாவட்டத்தில் சிறப்பிடம் பிடித்து சாதனை : பாரதி பள்ளி மாணவிக்கு சி.இ.ஓ., பாராட்டு
UPDATED : மே 09, 2025 05:10 AM
ADDED : மே 09, 2025 05:04 AM

கள்ளக்குறிச்சி: பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை புரிந்த பாரதி பள்ளி மாணவிக்கு சி.இ.ஓ., பாராட்டு தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி பாரதி கல்வி நிறுவன மாணவ மாணவியர், மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
இதில் மாணவி நோயல் ஜாய்சி 600க்கு 595 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார்.
இவர் தமிழ் 99, ஆங்கிலம் 98, கணிதம் 99, இயற்பியல் 99, வேதியியல் 100, கணிணி அறிவியல் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். இவரை தொடர்ந்து மாணவி தீபிகா, மாணவர் சரவணவேல் ஆகியோர் 589 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
அடுத்து, மாணவர் ராஜேஷ் 588 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் பள்ளியில், 550க்கு மேல் 13 மாணவர்கள்; 500க்கு மேல் 36 மாணவர்கள்; மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இதில் வேதியியல் 2, கணிணி அறிவியல் 9, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் 3 என 14 பேர் 'சென்டம்' மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்த மாணவி ஜோயல் ஜாய்சி மற்றும் மாணவர்கள் சி.இ.ஓ., கார்த்திகாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மேலும், தேர்வில் சாதனை புரிந்து பள்ளிக்கு பெருமை சேர்ந்த மாணவர்களை பள்ளி தாளாளர் கந்தசாமி, தச்சூர் ஆக்ஸாலிஸ் பள்ளி தாளாளர் பரத்குமார், செயலாளர் சாந்தி பரத்குமார், பள்ளி முதல்வர் ராமசாமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

