ADDED : பிப் 13, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தி.மு.க., பிரசாரத்தை துவங்கி விட்டது.
இதையொட்டி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, அறிக்கை தயாரிப்பு குழு மற்றும் தொகுதி பங்கீடு பற்றி கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தும் குழு என மொத்தமாக 3 குழுக்களை உருவாக்கியது. இந்நிலையில், தி.மு.க., ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சாதனைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், வாகனத்தில் எல்.இ.டி., திரை மூலம் பிரசார பணியையும் துவங்கி விட்டது.
இதில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் குறித்து பேசுகிறார். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வாகனத்தை நிறுத்தி பிரசாரம் செய்யப்படுகிறது.