/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பருவ மழையில் தோட்டக்கலை பயிர்கள் பாதுகாக்கும் வழிமுறை குறித்து ஆலோசனை
/
பருவ மழையில் தோட்டக்கலை பயிர்கள் பாதுகாக்கும் வழிமுறை குறித்து ஆலோசனை
பருவ மழையில் தோட்டக்கலை பயிர்கள் பாதுகாக்கும் வழிமுறை குறித்து ஆலோசனை
பருவ மழையில் தோட்டக்கலை பயிர்கள் பாதுகாக்கும் வழிமுறை குறித்து ஆலோசனை
ADDED : அக் 29, 2025 11:36 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில் தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் சிவக்குமார் அறிவிப்பு;
பருவ மழைக்காலத்தில் அனைத்து வயல்களிலும் அதிக நீர் தேங்கா வண்ணம் உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும். நீர் பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் குச்சிகளால் முட்டுக்கொடுத்து செடிகளை சாயாமல் பாதுகாக்க வேண்டும்.
மா, பலா, முந்திரி, கொய்யா, எலுமிச்சை உள்ளிட்ட பல்லாண்டு பயிர்களை பாதுகாக்க, காய்ந்த, பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும். மரங்களின் எடையை குறைக்க கிளைகளை அகற்ற வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அனைத்து, தண்டு பகுதியில் மண்ணை குவித்து வைக்க வேண்டும். மழை முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு உள்ள வேர் பகுதியை சுற்றி மண் அணைக்க வேண்டும்.
வாழை உள்ளிட்ட வருடாந்திர பயிர்களை சவுக்கு, யூகலிப்டஸ் உள்ளிட்ட கம்புகளை ஊன்று கோலாக பயன்படுத்தி முட்டுக்கொடுக்க வேண்டும். அத்துடன் நிழல்வலைக்குடிலின் அடிப்பாகத்தில் பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைக்க வேண்டும். அதேபோல் பசுமைக்குடிலின் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைக்க வேண்டும்.
இதன் கதவுகள், ஜன்னல்களை பத்திரமாக மூடி உட்பகுதியில் காற்று புகாமல் பாதுகாக்க வேண்டும். மிளகு செடிகளுக்கு உரிய வடிகால் செய்திட வேண்டும். தாங்கு செடிகளில் நிழலினை ஒழுங்குபடுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

