/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்னேற்பாடு குறித்த ஆலோசனை
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்னேற்பாடு குறித்த ஆலோசனை
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்னேற்பாடு குறித்த ஆலோசனை
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்னேற்பாடு குறித்த ஆலோசனை
ADDED : ஜூலை 14, 2025 03:42 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகர்ப்புற, ஊரக பகுதிகளில் வரும் 15ம் தேதி, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் துவங்க உள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறைகள், தகவல் கையேடு வழங்கும் பணியின் முன்னேற்றம், தன்னார்வலர்களின் வருகை கண்காணித்தல், விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட முகாம் தொடர்பான பல்வேறு நடைமுறைகள் குறித்aது அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
மேலும், மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் பதிவேற்றம் செய்வது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, சப் கலெக்டர் சுமதி உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.