/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி மோட்டார்களை இயக்க அட்வைஸ்
/
சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி மோட்டார்களை இயக்க அட்வைஸ்
சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி மோட்டார்களை இயக்க அட்வைஸ்
சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி மோட்டார்களை இயக்க அட்வைஸ்
ADDED : ஜூலை 07, 2025 02:24 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் பகல் நேரங்களில் சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி, விவசாய மின் மோட்டார்களை இயக்க வேண்டும் என மேற்பார்வை பொறியாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மயில்வாகனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
பகலில் இலவமாக கிடைக்கும் புதுப்பிக்கக்கூடிய சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும். இதன் மூலம், பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிக்க முடிகிறது. அத்துடன் மற்ற வளங்களை கொண்டு மின்சாரம் தயாரிக்கும்போது ஏற்படும் மாசுபாடு அளவும் குறைக்கப்படும். எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் பகல் நேர சூரிய மின் ஆற்றலை முழுமையாக பயன்படுத்தி, தங்களின் விவசாய மின் மோட்டார்களை இயக்க வேண்டும்.