/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பொது தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க ஆலோசனை
/
பொது தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க ஆலோசனை
பொது தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க ஆலோசனை
பொது தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க ஆலோசனை
ADDED : அக் 31, 2025 11:29 PM
கள்ளக்குறிச்சி: அரசு பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் பொருட்டு பள்ளி தலைமையாசிரியர்களுடனான ஆலோசனை நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் உயர்த்துவது குறித்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில், கடந்தாண்டு தேர்ச்சி சதவீதம் மற்றும் இந்தாண்டில் இதுவரை நடந்த தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பள்ளி மாணவர்கள் வருகையை அதிகரிப்பதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கடந்தாண்டு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி குறைவாக பெற்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட கற்றல் கையேடு குறித்தும், அவற்றின் பயன்பாடுகள் குறித்து கேட்டறியப்பட்டது.
பொதுத் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் ஆசிரியர்கள் தொடர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றவும், பள்ளி தலைமையாசிரியர்கள் தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் சி.இ.ஓ., கார்த்திகா மற்றும் பள்ளி கல்வி துறை அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

