/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மலைவாழ் மக்களுக்கு வன உரிமை சான்றிதழ் வழங்க ஆலோசனை
/
மலைவாழ் மக்களுக்கு வன உரிமை சான்றிதழ் வழங்க ஆலோசனை
மலைவாழ் மக்களுக்கு வன உரிமை சான்றிதழ் வழங்க ஆலோசனை
மலைவாழ் மக்களுக்கு வன உரிமை சான்றிதழ் வழங்க ஆலோசனை
ADDED : நவ 19, 2025 07:54 AM

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை பழங்குடியின மக்களுக்கு தனிநபர் வனஉரிமை சான்றிதழ் வழங்குவது தொடர்பாக மாவட்ட அளவிலான குழு கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு தனிநபர் வன உரிமை சான்று வழங்குவது தெடர்பான மாவட்ட அளவிலான வன உரிமைக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கல்வராயன்மலை பழங்குடியின மக்கள், காடு புறம்போக்கு எனும் அரசு புறம்போக்கு நிலங்களில் விவசாய நிலங்களாக பயன்படுத்தி வரும் இடங்களுக்கு தனிநபர் வன உரிமைச் சான்று வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், 1,046 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு, அனைவருக்கம் வன உரிமைச் சான்றிதழ் வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தவும், குறைகளை நிவர்த்தி செய்யவும், பழங்குடியின மக்ளுக்காக அரசு செயல்படுத்தும் அனைத்து நலத்திட்டங்களும் உரிய முறையில் சென்று சேர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. டி.ஆர்.ஓ., ஜீவா, மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி, தனி தாசில்தார் கமலக்கண்ணன் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

