/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருப்பாலபந்தலில் வான்நோக்கு அறிவியல் நிகழ்வு
/
திருப்பாலபந்தலில் வான்நோக்கு அறிவியல் நிகழ்வு
ADDED : ஜன 18, 2024 04:52 AM
திருக்கோவிலுார்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் திருப்பாலபந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வான்நோக்கு நிகழ்வு நடந்தது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வானியல் தொடர்பான பரப்புரை மற்றும் தொலைநோக்கி மூலம் நிலா, வியாழன், செவ்வாய், சனி போன்ற கோள்களை காணும் வான்நோக்கி நிகழ்வு திருப்பாலபந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
மாவட்ட அறிவியல் பிரசார இணை ஒருங்கிணைப்பாளர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். அறிவியல் இயக்க திருக்கோவிலுார் ஒன்றிய பொருளாளர் பச்சையப்பன் வரவேற்றார். எழுத்தாளரும், அறிவியல் இயக்க வட சென்னை மாவட்ட செயலாளருமான தேன்மொழிச்செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வானியல் குறித்தும், தொலைதூர கோள்களை பார்வையிடுவது குறித்து மாணவர்களுக்கு தொலைநோக்கி வாயிலாக விளக்கி கூறினார்.
தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் அமைப்பினர் செய்திருந்தனர்.