/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விழா காலம் முடிந்த பின் மின்வார விழா; பேனரில் தேதியை மாற்றாமல் 'சிக்கனம்'
/
விழா காலம் முடிந்த பின் மின்வார விழா; பேனரில் தேதியை மாற்றாமல் 'சிக்கனம்'
விழா காலம் முடிந்த பின் மின்வார விழா; பேனரில் தேதியை மாற்றாமல் 'சிக்கனம்'
விழா காலம் முடிந்த பின் மின்வார விழா; பேனரில் தேதியை மாற்றாமல் 'சிக்கனம்'
ADDED : ஜன 07, 2025 12:07 AM
உளுந்துார்பேட்டையில் காலதாமதமாக நடந்த மின் வாரிய விழிப்புணர்வு பேரணியில் தேதியை திருத்தாமல் பிடித்து சென்றனர்.
உளுந்துார்பேட்டை மின் பகிர்மானம் சார்பில் மின்சிக்கன வாரம் கடந்தாண்டு டிசம்பர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அப்போது மின்சாரத்தை சேமிப்போம், வீட்டையும் நாட்டையும் ஒளிரசெய்வோம். 5 நட்சத்திர தர குறியீடு செய்யப்பட்ட சாதனங்களை வீட்டிற்கு வாங்குவோம், மின் விரயத்தை நிறுத்துவோம், இந்தியாவை ஒளிர செய்வோம் என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பேரணி நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் உளுந்தூர்பேட்டை மின் பகிர்மானம் சார்பில் கடந்த 3ம் தேதி தான் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
போலீஸ் ஸ்டேஷனிலிருந்து துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணிக்கு மின்வாரிய செயற்பொறியாளர் சர்தார் தலைமை தாங்கினார்.
உதவி கோட்ட பொறியாளர் அய்யம்பெருமாள், மின் வாரிய ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது கடந்த மாதம் தேதியுடன் தயாரிக்கப்பட்ட பேனரை தேதியை மாற்றாமலும், அதன் மீது பேப்பரால் திருத்தி எழுதி ஒட்டாமலும் பேனர் பிடித்து சென்றனர். அப்போது பாதுகாப்புக்கு வந்த போலீசார் தேதியை கூட மாற்றாமல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவது ஏன் என கேட்டனர்.
அதற்கு தேதி ஒரு முக்கியமில்லை. விழிப்புணர்வு நிகழ்ச்சி தான் முக்கியம் என மின்வாரிய அதிகாரிகள் கூறுவிட்டு நகர்ந்தனர்.

