/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விமானப்படையில் அக்னிவீர் வாயு தேர்வு
/
விமானப்படையில் அக்னிவீர் வாயு தேர்வு
ADDED : ஜன 12, 2025 10:43 PM
கள்ளக்குறிச்சி; அக்னிபாத் திட்டத்தின் மூலம் விமானப்படையில் அக்னிவீர் வாயு தேர்விற்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;
இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீர் வாயு தேர்விற்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.தேர்விற்கு திருமணமாகாத ஆண் மற்றும் பெண்கள் ஆன்லைன் முறையில் வரும் 27 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொடர்ந்து வரும் மார்ச், 23 ம் தேதி முதல் இணையதளம் வாயிலாக தேர்வு நடைபெற உள்ளது.
இத்தேற்விற்கான கல்வி தகுதியாக கணிதம் மற்றும் அறிவியல் பின்புலமாக கொண்டு 12ம் வகுப்பு தேர்ச்சி, மூன்று ஆண்டு டிப்ளமோ இன்ஜீனியரிங் முடித்தவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு குறித்த விவரங்களை https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். பயிற்சி காலத்தில் மாதம் 30 ஆயிரம் ஊதியம், நான்கு ஆண்டு பயிற்சி கால முடிவில் பட்டபடிப்பிற்கு இணையான திறன் சான்றிதழ், 10 லட்சம் வரை அக்னிவீர் நிதியும் வழங்கப்படும்.கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர்கள் அதிகளவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விபரங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 04151-295422 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.