ADDED : டிச 13, 2024 06:56 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் வேளாண் விரிவாக்க மையத்தில் வேளாண் இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதை இடுபொருட்களை அனைத்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு திட்ட பணிகளை குறிப்பிட்டகாலத்திற்குள் விரைந்து செயல்படுத்திட அறிவுறுத்தினார். மழையினால்பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் விடுபடாமல் கணக்கெடுத்து, விரைந்துஅறிக்கை சமர்ப்பிக்குபடி உத்தரவிட்டார்.
நெடுமானுார் கிராமத்தில் உளுந்துசெயல்விளக்க வயலை பார்வையிட்டு அதிக மகசூல் பெறுவதற்கானதொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
பின், சரவணன் என்பவரது வயலில் அமைக்கப்பட்டுள்ள மணிலா விதைப் பண்ணையை ஆய்வு செய்தார்.
வேளாண் உதவி இயக்குனர் ஆனந்தன், வேளாண் அலுவலர் மோகன்ராஜ். உதவிவேளாண் அலுவலர் முருகேசன், உதவி விதை அலுவலர் துரை, பழனிவேல், ஆத்மாதிட்ட தொழில்நுட்ப மேலாளர் மவிசுதா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள்அருண்குமார், லோகபிரியா, நர்மதா ஆகியோர் உடனிருந்தனர்.

