/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மூக்கனுார் கிராமத்தில் வேளாண் திட்ட முகாம்
/
மூக்கனுார் கிராமத்தில் வேளாண் திட்ட முகாம்
ADDED : டிச 01, 2025 05:40 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த மூக்கனுார் கிராமத்தில் உழவரை தேடி வேளாண் திட்ட முகாம் நடந்தது.
முகாமிற்கு துணை வேளாண்மை அலுவலர் முருகேசன் தலைமை தாங்கி, வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு மானிய திட்டங்கள், நலத்திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைத்தார்.
சம்பா நெல் சாகுபடிக்கு விவசாயிகள் அனைவருக்கும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். சங்கராபுரம் வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு தேவையான நெல் ரகங்கள் மானிய விலையில் பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. வேளாண்மை உதவி அலுவலர் வெங்கடேசன், சத்தியபிரியா, ஆட்மா திட்ட தொழில் நுட்ப மேலாளர் அருண்குமார், லோகபிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.

