ADDED : டிச 21, 2025 03:27 AM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட செயலாளர் சிவா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணி ஆகியோர் கண்டன உரை ஆற்றினார். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய பா.ஜ., அரசை கண்டித்தும், பெயர் மாற்றம் செய்ததை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மா.கம்யூ., வட்ட செயலாளர் ஏழுமலை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட தலைவர் தெய்வீகன், விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
