/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுதானியங்கள் மதிப்பு கூட்டும் மையத்தில் வேளாண் அதிகாரி ஆய்வு
/
சிறுதானியங்கள் மதிப்பு கூட்டும் மையத்தில் வேளாண் அதிகாரி ஆய்வு
சிறுதானியங்கள் மதிப்பு கூட்டும் மையத்தில் வேளாண் அதிகாரி ஆய்வு
சிறுதானியங்கள் மதிப்பு கூட்டும் மையத்தில் வேளாண் அதிகாரி ஆய்வு
ADDED : ஆக 15, 2025 10:51 PM

ரிஷிவந்தியம், ; பழைய சிறுவங்கூரில் தமிழ்நாடு சிறுதானிய இயக்க திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிறுதானியங்கள் மதிப்பு கூட்டும் மையத்தை வேளாண் விற்பனை மற்றும் வணிக ஆணையர் ஆய்வு செய்தார்.
வாணாபுரம் அடுத்த பழைய சிறுவங்கூர் கிராமத்தில் தமிழ்நாடு சிறு தானிய இயக்க திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள் மதிப்பு கூட்டும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வெளிபகுதியில் இருந்து வரவழைக்கப்படும் வரகு, திணை, சாமை, குதிரை வாலி உள்ளிட்ட சிறுதானிய வகைகளை அரைத்து, பதர் நீக்கி விற்பனை செய்யப்படுகிறது.
இந்த மையத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையர் ஆபிரகாம், வணிக செயல்பாடுகள், இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, சிறு தானிய கொழுகட்டை மற்றும் ஊட்டச்சத்து மாவு, பாயாசம், லட்டு, பிஸ்கெட் உள்ளிட்ட பொருட்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. சிறுதானியங்களின் நன்மைகள், சந்தைப்படுத்துதல், அயல்நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் வழிமுறைகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்து அதிக வருவாய் பெறும் முறைகள் குறித்து உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர் திலகம் விளக்கினார்.
வேளாண்மை துணை இயக்குநர் ரமேஷ், வேளாண்மை அலுவலர்கள் தமிழ்வாணன், ராஜ்குமார் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் உடனிருந்தனர்.