
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அடுத்த கூத்தனுாரில் தமிழ்நாடு வேளாண்மை துறை மற்றும் இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் நிறுவனம் இணைந்து விவசாய கருத்தரங்கை நடத்தியது.
இந்தியன் பொட்டாஷ் நிறுவனத்தின் முதுநிலை மண்டல மேலாளர் பார்வதிராஜா தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக இந்தியன் பொட்டாஷ் நிறுவன டில்லி பொது மேலாளர் உபேந்தர்நாத்சிங் உரங்கள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும், பயன்படுத்த வேண்டிய முறைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
சென்னை துணை மேலாளர் ஹரிபாபு உரங்களின் வகைகள் குறித்து விளக்கி பேசினார்.
கள்ளக்குறிச்சி வேளாண் உதவி இயக்குனர் அன்பழகன் பயிர் சாகுபடி முறைகள் குறித்து விளக்கி பேசினார்.
உளுந்துார்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் கிருபாகரன், வேளாண்துறை சார்பில் வழங்கப்படும் அரசு திட்டங்கள் குறித்தும், விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என விளக்கினார். கள்ளக்குறிச்சி கற்பக விநாயகர் ட்ரேடர்ஸ் கோபிநாத் வாழ்த்திப் பேசினார்.