/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எறையூரில் அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
/
எறையூரில் அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
ADDED : ஜூலை 29, 2025 10:25 PM

உளுந்துார்பேட்டை; அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் எறையூரில் திண்ணை பிரசாரம் நடந்தது.
மாவட்ட ஜெ., பேரவை சார்பில் உளுந்துார்பேட்டை அடுத்த எறையூரில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த சாதனை குறித்த துண்டு பிரசுரம் வழங்கி திண்ணை பிரசாரம் நடந்தது. மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல் தலைமை தா ங்கினார். செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் சுப்ராயன், மணிராஜ், நகர செயலாளர் துரை, முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கியதாஸ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் குமரகுரு பங்கேற்று, பொதுமக்களிடம் கடந்த அ.தி.மு.க., ஆட்சி சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரத்தை துவக்கி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர் சந்திரன், பிற அணி செயலாளர்கள் ராஜிவ்காந்தி, கிருபானந்தன், பொதுக்குழு உறுப்பினர் மணி , பேரவை நிர்வாகிகள் மதியழகன், வெற்றிவேல், உதயகுமார், அய்யப்பன், தவடன், கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர். பேரவை துணை செயலாளர் செல்வபாண்டியன் நன்றி கூறினார்.