/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலத்தில் அ.தி.மு.க., திண்ணை பிரசார கூட்டம்
/
சின்னசேலத்தில் அ.தி.மு.க., திண்ணை பிரசார கூட்டம்
ADDED : ஆக 10, 2025 11:43 PM

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் மந்தைவெளியில் அ.தி.மு.க., திண்ணை பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அய்யம்பெருமாள், ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், ராமதாஸ் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ராகேஷ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயக்குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு, முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், உதயக்குமார் எம்.எல்.ஏ., பேசியதாவது; அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க., அரசு ரத்து செய்து விட்டது. வரும் தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றதும், லேப்டாப், தாலிக்கு தங்கம், தீபாவளிக்கு பெண்களுக்கு பட்டுப்புடவை வழங்கப்படும். தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு இருப்பதற்கு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களே சாட்சி என பேசினார்.
முன்னதாக அ.தி.மு.க., அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பிரபு, அழகுவேலுபாபு, சதன்பிரபாகரன், ராஜவர்மன், முன்னாள் எம்.பி., காமராஜ், பிற அணி மாவட்ட செயலாளர்கள் தங்கபாண்டியன், அய்யாகண்ணு, சீனுவாசன், ராஜீவ்காந்தி, வினோத், சதீஷ்பாண்டியன், பாண்டியன், பவுல்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, அருணகிரி, குப்பன், அசோகன், ராஜேந்திரன், ராஜாராம், இளந்தேவன், துரைராஜ், மணிராஜ், ஜெ., பேரவை நகர செயலாளர் பரமசிவம், மாவட்ட நிர்வாகிகள் அருள், அருள்மணி, கோவிந்தன், ராமு, குமார், ஏழுமலை, ஒன்றிய நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், சுந்தரமூர்த்தி, கதிரவன், திருமால், குட்டி, வெற்றிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஜெ., பேரவை இணை செயலாளர் டைகர் பிரபு நன்றி கூறினார்.