அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்: அ.தி.மு.க., வேட்பாளர் பழனிசாமி உறுதி
அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்: அ.தி.மு.க., வேட்பாளர் பழனிசாமி உறுதி
ADDED : ஏப் 19, 2026 06:44 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் நேற்று திருக்கோவிலுார் நகராட்சியின் அனைத்து வார்டுகளுக்கு சென்று ஓட்டு சேகரித்தார்.
திருக்கோவிலுார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பழனிசாமி நேற்று திருக்கோவிலுார் நகராட்சியின் 27 வார்டுகளுக்கும் வீதி வீதியாக சென்று ஓட்டு சேகரித்தார். கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் மலர் துாவி வரவேற்றனர். அப்பொழுது வேட்பாளர் பழனிசாமி கூறியதாவது; திருக்கோவிலுார் தொகுதியில் கடந்த 5 ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில் அடிப்படை வசதிகள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக திருக்கோவிலுார் நகராட்சியில் கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கப்படவில்லை. அ.தி.மு.க., அரசு அமைந்த உடன் நகராட்சியின் அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும்.
சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுகாதாரம் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக திருக்கோவிலுாருக்கு வருகின்றனர். அங்கு, தரமான சிகிச்சை, வசதிகள் கிடைக்க அரசு மருத்துவமனை முழுமையாக செயல்பட பாடுபடுவேன். அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பிரிட்ஜ், அத்துடன் ரூ. 10 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என கூறினார்.
