அடிப்படை வசதிகள் மேம்பட பாடுபடுவேன்: அ.தி.மு.க., வேட்பாளர் பழனிச்சாமி வாக்குறுதி
அடிப்படை வசதிகள் மேம்பட பாடுபடுவேன்: அ.தி.மு.க., வேட்பாளர் பழனிச்சாமி வாக்குறுதி
ADDED : ஏப் 03, 2026 08:01 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பழனிசாமி வீரங்கிபுரம், ஒதியத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீதி வீதியாக நடந்து சென்று ஓட்டு சேகரித்தார்.
திருக்கோவிலுார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பழனிசாமி நேற்று காலை வீரங்கிபுரத்தில் உள்ள காட்டு அய்யனார் கோவிலில் சிறப்பு பூஜை செய்து கட்சி நிர்வாகிகளுடன் தனது பிரசாரத்தை துவக்கினார். ஒதியத்துார், கீழ்வாலை, ஒடுவன்குப்பம், ஆலம்பாடி என பல்வேறு கிராமங்களில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அப்பொழுது அவர் பேசுகையில்; கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசின் நல திட்டங்கள் மக்களை சென்றடையவும், கிராமங்களின் அடிப்படை வசதிகள் மேம்பட்டு மக்களின் வாழ்வாதாரம் உயர அ.தி.மு.க., விற்கு ஓட்டு அளியுங்கள். வீடு தோறும் பிரிட்ஜ் உள்ளிட்ட அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியின் தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றிட ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
பிரசாரத்தின் போது கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஒடுவன்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் மகளிர் அணியினர் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
