ADDED : ஜூன் 12, 2025 01:10 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் ஜெ.,பேரவை ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். நகர பேரவை செயலாளர் குட்டி வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு, பேரவை தலைவர் தமிழ்செல்வன் ஆகியோர் பேசினர்.
இதில் வரும் 28 ம் தேதி உளுந்துார்பேட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகை தரும் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிப்பது, மாவட்டத்தில் 5 சட்டசபை தொகுதிகளிலும் பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைத்தமைக்கு நன்றி தெரிவிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் பேரவை இணை செயலாளர்கள் ரவி, அய்யம்பெருமாள், பிரபு, ராஜேந்திரன், அருள், மணிவண்ணன், முனியன், வெங்கடேசன், துணை செயலாளர்கள் வேணுகோபால், ஜெய்சங்கர், குரு, ஆகாஷ்துரை, பாலசுந்தரம், குமார், பார்த்தசாரதி, கோவிந்தன், சிவா மற்றும் ஒன்றிய, நகர பேரவை செயலாளர்கள் பங்கேற்றனர். ஒன்றிய பேரவை செயலாளர் கஜேந்திரமணி நன்றி கூறினார்.