/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அ.தி.மு.க., மெகா கொடி கம்பம் பணி மாவட்ட செயலாளர் குமரகுரு ஆய்வு
/
அ.தி.மு.க., மெகா கொடி கம்பம் பணி மாவட்ட செயலாளர் குமரகுரு ஆய்வு
அ.தி.மு.க., மெகா கொடி கம்பம் பணி மாவட்ட செயலாளர் குமரகுரு ஆய்வு
அ.தி.மு.க., மெகா கொடி கம்பம் பணி மாவட்ட செயலாளர் குமரகுரு ஆய்வு
ADDED : ஆக 20, 2025 10:54 PM

திருக்கோவிலுார், ; திருக்கோவிலுாரில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்கும் கூட்டத்தில் மெகா கொடி கம்பம் அமைக்கும் பணியை மாவட்ட செயலாளர் குமரகுரு ஆய்வு செய்தார்.
திருக்கோவிலுார் ரிஷிவந்தியம் தொகுதி அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, தேர்தல் ஆலோசனைகள் வழங்க அடுத்த மாதம் 3ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி திருக்கோவிலுார் வர உள்ளார். இதற்காக திருக்கோவிலுார் புறவழிச் சாலை, கீரனுார் கூட்ரோட்டில் 126 அடி உயர பிரம்மாண்ட கொடி கம்பம் மற்றும் பொதுக் கூட்டத்திற்கான மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதனை மாவட்டச் செயலாளர் குமரகுரு நேற்றுஆய்வு செய்தார். பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியை துரிதப்படுத்த நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். நகர செயலாளர் சுப்பு, ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, பழனி, சந்தோஷ், இளங்கோவன், முன்னாள் ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி, முன்னாள் நகர செயலாளர் இளவரசன், தொழிலதிபர் பிரபு சிவராஜ், சதீஷ்பாண்டியன், நகர பொருளாளர் ஷபி, நகர மன்ற கவுன்சிலர்கள் ரகு, வினோத், பிரைமதிஏழுமலை, நிர்வாகிகள் சீனிவாசன், பார்த்திபன், சுபாஷ், சிவா, சின்னத்தம்பி, ஏசுபாதம், கண்ணன், பாலாஜி ஆதன்ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

