/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வரும் தேர்தலில் தி.மு.க.,வை ஓட ஓட விரட்ட வேண்டும் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு பேச்சு
/
வரும் தேர்தலில் தி.மு.க.,வை ஓட ஓட விரட்ட வேண்டும் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு பேச்சு
வரும் தேர்தலில் தி.மு.க.,வை ஓட ஓட விரட்ட வேண்டும் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு பேச்சு
வரும் தேர்தலில் தி.மு.க.,வை ஓட ஓட விரட்ட வேண்டும் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு பேச்சு
ADDED : ஜூலை 01, 2025 01:39 AM

கள்ளக்குறிச்சி: 'தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டனர்' என அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு பேசினார்.
உளுந்துார்பேட்டையில் அ.தி.மு.க., சார்பில் நடந்த கட்சி கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 சட்டசபை தொகுதிகளில் வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தலைமை அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்து பொதுச் செயலாளர் பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். ஒரு குடும்பம் நடத்த வேண்டும் என்றால், இன்னொருவரை நம்பி நாம் குடும்பம் நடத்த மாட்டோம். நம்மை நம்பி தான் குடும்பம் நடத்துவோம். விசுவாத்துடன் பணியாற்றி வரும் தேர்தலில் அ.தி.மு.க, வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
அ.தி.மு.க., நிர்வாகிகள், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் 500 ஓட்டுகளை பெற்று தந்தால் போதும். நாம் யார் தயவும் இல்லாமல், தனித்து நின்றாலும் அமோகமாக வெற்றி பெறுவோம்.
வரும் சட்டசபை தேர்தலுக்குப்பின் பழனிசாமி தான் முதல்வர். அவர் தலைமையில் தான் ஆட்சி அமையுமே தவிர, வேறு எந்த பேச்சுக்கும் இடமில்லை. வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை ஓட, ஓட விரட்ட வேண்டும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து விட்டனர்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக்குவதற்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திற்கு தி.மு.க.,வினர் அவசர அவசரமாக அடிக்கல் நாட்டியுள்ளனர்.
தி.மு.க.,வினர் அடிக்கும் கூட்டுக் கொள்ளை, தில்லு முல்லுக்கு, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் விசாரணை கமிஷன் அமைத்து தக்க பாடம் புகட்டபடும்.
இவ்வாறு குமரகுரு பேசினார்.