/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : டிச 23, 2024 10:44 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஒன்றிய, நகர, பேரூராட்சி பிற அணி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி சண்முகா மகாலில் நடந்த கூட்டத்திற்கு, , மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி.,காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேலுபாபு, பிரபு, ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், மாவட்ட அவைத் தலைவர் பச்சையாப்பிள்ளை முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாபு வரவேற்றார்.
கூட்டத்தில், வரும் 2026ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியை முதல்வராக பொறுப்பேற்க அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றுவது. பிற அணி செயலாளர்கள் பூத் கமிட்டி அமைத்து தீவிரமாக பணியாற்ற தீர்மானிக்கப்பட்டது.
ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், அய்யம்பெருமாள், தண்டபாணி, அருணகிரி, துரைராஜ், ராஜாராம், மேலப்பட்டு ராஜேந்திரன், இளந்தேவன், பிற அணி செயலாளர்கள் சீனுவாசன், தங்கபாண்டியன், வினோத், ராஜிவ்காந்தி, அய்யாக்கண்ணு, ஜான்பாஷா, பொருளாளர் வெற்றிவேல், நகர செயலாளர்கள் ஷியாம்சுந்தர், ராகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் நன்றி கூறினார்.