/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி தொகுதியில் 'சீட்' பெற காய் நகர்த்தும் அ.தி.மு.க., நிர்வாகிகள்
/
கள்ளக்குறிச்சி தொகுதியில் 'சீட்' பெற காய் நகர்த்தும் அ.தி.மு.க., நிர்வாகிகள்
கள்ளக்குறிச்சி தொகுதியில் 'சீட்' பெற காய் நகர்த்தும் அ.தி.மு.க., நிர்வாகிகள்
கள்ளக்குறிச்சி தொகுதியில் 'சீட்' பெற காய் நகர்த்தும் அ.தி.மு.க., நிர்வாகிகள்
ADDED : ஆக 12, 2025 02:42 AM
க ள்ளக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க., தொடர்ந்து வெற்றி பெறுவதால் வரும் தேர்தலில் ''சீட்' பெறுவதற்கு அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
தொகுதி மறு சீரமைப்பி ன் கீழ் சின்னசேலம் தொகுதி நீக்கப்பட்டு கள்ளக்குறிச்சி (தனி)சட்டசபை தொகுதி கடந்த 2009ம் ஆண்டு உருவான து.
தொடர்ந்து நடந்த 2011 தேர்தலில் அழகுவேல் பாபு, 2016 தேர்தலில் பிரபு, 2021 தேர்தலில் செந்தில்குமார் ஆகிய 3 பேரும் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினர்.
தொடர்ந்து 3 முறை அ.தி.மு.க.,வுக்கு 'ஹட்ரிக்' வெற்றி கிடைத்ததால் வரும் தேர்தலிலும் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதியாக கள்ளக்குறிச்சி பார்க்கப்படுகிறது.
கடந்த 2016 தேர்தலில் முன்னாள் அமைச்சர் மோகன், 2021 தேர்தலில் மாவட்ட செயலாளர் குமரகுரு ஆகியோர் தோல்வி யடைந்த போதிலும் கள்ளக்குறிச்சியில்3 தேர்தலிலும் புது முகங்கள் வெற்றி பெற்றது அக்கட்சிக்கு செல்வாக்கு உள்ளதை வெளிப்படுத்தியது.
இதன் காரணமாக வரும் தேர்தலில் இத்தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட 'சீட்' கேட்டு பெறுவதில் முக்கிய நிர்வாகிகள் இடையே இப்போதே போட்டோ போட்டி துவங்கியுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு நெருக்கமாக உள்ளதால் இவர் பரிந்துரை செய்பவருக்கே சீட் உறுதியாகும் என பேசப்படுகிறது.
கடந்த தேர்தலில் குமரகுருவின் விசுவாசியான செந்தில்குமாருக்கு சீட் கொடுக்கப்பட்டு அவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார். தற்போது அ.தி.மு.க., எதிர் கட்சியாக இருப்பதால் கடந்த தேர்தலை போல் செலவு செய்ய முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் குமரகுரு போட்டியிட்டு பெருமளவில் செலவு செய்த போதும் வெற்றி பெற முடியவில்லை.
இதன் காரணமாக, வரும் தேர்தலில் சொந்த பணத்தை செலவு செய்ய தயாராக உள்ளவர்களுக்கு மட்டுமே சீட் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ., செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பிரபு, அழகுவேல் பாபு, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தங்க பாண்டியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜிவ் காந்தி ஆகியோர் சீட் பெற காய் நகர்த்தி வருகின்றனர்.
சீட் கிடைத்து விட்டால் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்ற முனைப்பில் பொதுச் செயலாளர் பழனிசாமி மாவட்ட செயலாளர் குமரகுரு ஆகியோரிடம் பெரு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.