/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பானையங்காலில் அ.தி.மு.க., ஜெ., பேரவை திண்ணை பிரசாரம்
/
பானையங்காலில் அ.தி.மு.க., ஜெ., பேரவை திண்ணை பிரசாரம்
பானையங்காலில் அ.தி.மு.க., ஜெ., பேரவை திண்ணை பிரசாரம்
பானையங்காலில் அ.தி.மு.க., ஜெ., பேரவை திண்ணை பிரசாரம்
ADDED : ஆக 03, 2025 04:54 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த பானையங்காலில், அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் திண்ணைப் பிரசாரம் மற்றும் கடந்த ஆட்சியின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பிரபு, அழகுவேலு, ஒன்றிய செயலாளர் அய்யப்பா, நகர செயலாளர் ஷியாம்சுந்தர், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் ஜெயசந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, முன்னாள் அமைச்சர் மோகன் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
மாவட்ட அவை தலைவர் பச்சையாப்பிள்ளை, ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், அய்யம்பெருமாள், பிற அணி செயலாளர்கள் தங்கபாண்டியன், சீனுவாசன், வினோத், ராஜிவ்காந்தி, பாண்டியன், கோவிந்தன், பேரவை செயலாளர்கள் மஞ்சமுத்து, நம்பி, செந்தில்குமார், துணை செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இணை செயலாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.