/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எம்.ஜி.ஆர்., நினைவு நாளையொட்டி அ.தி.மு.க., மாலை அணிவித்து மரியாதை
/
எம்.ஜி.ஆர்., நினைவு நாளையொட்டி அ.தி.மு.க., மாலை அணிவித்து மரியாதை
எம்.ஜி.ஆர்., நினைவு நாளையொட்டி அ.தி.மு.க., மாலை அணிவித்து மரியாதை
எம்.ஜி.ஆர்., நினைவு நாளையொட்டி அ.தி.மு.க., மாலை அணிவித்து மரியாதை
ADDED : டிச 25, 2025 06:44 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., நினைவு நாளையொட்டி அவரது சிலை மற்றும் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., மற்றும் அண்ணாதுரை சிலைக்கு மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அழகுவேல்பாபு, பிரபு, நகர செயலாளர் பாபு, மாவட்ட அவை தலைவர் பச்சயைாப்பிள்ளை, ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சீனுவாசன், முன்னாள் நகர சேர்மன் ரங்கன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாக்கண்ணு, எம்.ஜி.ஆர்.,மன்ற செயலாளர் தங்கபாண்டியன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் ராஜிவ்காந்தி, பாசறை செயலாளர் வினோத், நகர கவுன்சிலர்கள் குட்டி, முருகன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் எம்.ஜி.ஆர்., உருவபடத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சின்னசேலம் சின்னசேலம் ஒன்றிய, நகர அ.தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் நகரில் ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர்., சிலை மற்றும் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், அய்யம்பெருமாள், நகர செயலாளர் ராகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

