/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிகிச்சை பெறுபவருக்கு அ.தி.மு.க., செயலாளர் ஆறுதல்
/
சிகிச்சை பெறுபவருக்கு அ.தி.மு.க., செயலாளர் ஆறுதல்
ADDED : ஆக 07, 2025 11:38 PM

உளுந்துார்பேட்டை; பட்டாசு வெடி விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
உளுந்துார்பேட்டை அடுத்த கீழ்குப்பம்வேலுாரில் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்த விபத்தில் 3 பேர் இறந்தனர். பலர் படுகாயமடைந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையறிந்த அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு, படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறி பழங்கள் மற்றும் உதவிகள் வழங்கினார்.
பின்னர் இறந்தவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.